இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு அடுத்த ஆண்டு மே 5-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அதன்படி, பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஜேஇஇ முதன்மை தேர்வின் முதல் அமர்வு 2024-ஆம் ஆண்டு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1 வரையிலும், முதன்மை தேர்வின் இரண்டாவது அமர்வு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15 வரையும் நடைபெறுகிறது.
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவு தேர்வு 2024-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவு கியூட் தேர்வு இளங்கலை 2024 மே 15 முதல் மே 31 வரையும் கியூட் முதுகலை தேர்வு 2024 மார்ச் 11 முதல் மார்ச் 28 வரை நடைபெறுகிறது.
யூஜிசி நெட் நுழைவு தேர்வு 2024 ஜூன் 10 முதல் ஜூன் 21 வரை நடைபெற உள்ளது.
செல்வம்
மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்!
உடைந்த கூட்டணி: போஸ்டர் ஒட்டி மோதும் அதிமுக – பாஜகவினர்!