சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களில் இந்தியா என்ற வார்த்தைக்கு பதிலாக பாரத் என மாற்ற என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்துள்ளது.
சிபிஎஸ்சி பாடத்திட்ட புத்தகங்களைத் தயாரிக்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் கவுன்சில் குழுவின் கூட்டம் இன்று (அக்டோபர் 25) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாடப்புத்தகங்களில் இந்தியாவிற்கு பதிலாக பாரத் என்று மாற்றுவதற்கு என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும் பண்டைய வரலாறு என்ற வார்த்தைக்கு பதிலாகவும் பாரம்பரிய வரலாறு என்று மாற்றுவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்குப் பின் என்சிஇஆர்டி குழுவின் தலைவர் சி.ஐ.ஐசக் அளித்த பேட்டியில்,
“பாடப்புத்தகங்களில் அனைத்து பாடங்களிலும் ’இந்தியா’ என்ற பெயரை ’பாரத்’ என்று மாற்றவும் ’பண்டைய வரலாறு’ என்ற சொல்ல ’பாரம்பரிய வரலாறு’ என்று மாற்றவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பாடப்புத்தகங்களில் பல்வேறு போர்களில் ‘இந்து வெற்றிகளை’ முன்னிலைப்படுத்தவும் குழு பரிந்துரைத்துள்ளது. பாடப்புத்தகங்களில் இந்துக்களின் தோல்விகள் தற்போது குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் முகலாய அரசர்கள் மற்றும் சுல்தான்களை எதிர்த்து பெற்ற வெற்றிகள் இல்லை” என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெற்றது. இதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட இரவு விருந்திற்கான அழைப்பிதழில் “President of Bharat” என்று இருந்தது.
பாரத் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதை எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. செப்டம்பர் 6 ஆம் தேதி பிரதமர் மோடி இந்தோனேஷியா பயணம் மேற்கொண்ட போது அவருடைய பயண விவரத்திலும் பாரத பிரதமர் என வெளியிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து ஜி20 மாநாட்டின் போது பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன்பு பாரத் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாடப்புத்தகங்களில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று மாற்றம் செய்வதற்கு என்சிஇஆர்டி குழு பரிந்துரைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சங்கரய்யா தமிழகத்தின் சொத்து: அண்ணாமலை
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு தேதி அறிவிப்பு!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!