தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ராமநாதபுரம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்

ராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பாள் கிராமத்திலுள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரனுக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கவுள்ளார்.

அடுத்த மாதம் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் எழுத்தறிவு துறை, கல்வி அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று நாட்டின் சிறந்த ஆசிரியரைத் தேர்ந்தெடுத்து தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு, 46 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

செப்டம்பர் 5 ஆம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கவுள்ளார். அந்தப் பட்டியல் இன்று (ஆகஸ்டு 25) வெளியிடப்பட்டது.

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பாள் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் இடம்பெற்றிருக்கிறார்.

ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பைக் கொண்டாடுவதற்கும், பள்ளிக் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்திய ஆசிரியர்களுக்காகத் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

மோனிஷா

‘இனி’ஷியல் தமிழில்தான்: பள்ளிகல்வித்துறை முக்கிய உத்தரவு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts