நீண்ட போராட்டத்துக்கு பின் சீறி பாய்ந்த ஆர்டெமிஸ் 1!

இந்தியா

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை இன்று (நவம்பர் 16) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னெடி விண்வெளி மையத்தில் இருந்து ஆர்டெமிஸ் ராக்கெட் சீறிப்பாய்ந்தது.

நிலவுக்கு முதல்முறையாக கடந்த 1972-ஆம் ஆண்டு மனிதர்களை அனுப்பிய நாசா தற்போது இரண்டாவது முறையாக நிலவில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை அனுப்பியுள்ளது.

ஆர்டெமிஸ் ஆளில்லா ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்ப கடந்த ஆகஸ்ட் மாதம் நாசா திட்டமிட்டது. எரிபொருள் கசிவு, நிக்கோலஸ் சூறாவளி காரணமாக இந்த திட்டம் இரண்டு முறை தோல்வியடைந்தது.

nasa launches mega rocket artemis 1 on maiden flight to moon

மூன்றாவது முறையாக ஆர்டெமிஸ் 1 ராக்கெட் திட்டத்தை நிலவுக்கு அனுப்ப நாசா முயற்சி மேற்கொண்டு வந்தது. இன்று காலை இந்திய நேரப்படி 11.30 மணியளவில் ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டிருந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் ராக்கெட்டில் ஹைடிரஜன் வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் இந்த முறையும் ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஹைடிரஜன் வாயு கசிவை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் 47 நிமிடங்கள் தாமதமாக இந்திய நேரப்படி மதியம் 12.17 மணியளவில் ஆர்டெமிஸ் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. மீண்டும் 2025-ஆம் ஆண்டு ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் நிலவுக்கு மனிதர்களை நாசா அனுப்ப உள்ளது.

இதுகுறித்து நாசா தனது ட்விட்டர் பக்கத்தில், “நாங்கள் புறப்பட்டு விட்டோம். ஆர்டெமிஸ் 1 ராக்கெட் நிலவின் ஆய்வில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும்.” என்று தெரிவித்துள்ளது.

செல்வம்

பதில் சொல்கிறீர்களா? அபராதம் செலுத்திகிறீர்களா?: நீதிமன்றம் காட்டம்!

“இந்தியர்களுக்கு பெருமை” – ஜி-20 மாநாட்டில் மோடி பேச்சு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0