உக்ரைன் போர் குறித்து ரஷ்ய அதிபரிடம்  பிரதமர் மோடி வலியுறுத்தியது என்ன?

இந்தியா

ரஷ்ய அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் மோடி உக்ரைன் போருக்கான தீர்வு குறித்து வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு உச்சி மாநாடு ரஷ்யாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உக்ரைனுடனான போர் காரணமாக இந்தியா – ரஷ்யா உச்சி மாநாடு குறித்த அறிவிப்பை ரஷ்யா வெளியிடவில்லை.

இந்தச் சூழலில் ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

உக்ரைன் போர் குறித்து புதினிடம் பிரதமர் மோடி பேசியதாகவும், இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என மோடி வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்றது குறித்தும், இந்தியா – ரஷ்யா இடையிலான ஆற்றல் ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து புதினிடம் பிரதமர் மோடி பேசியதாகவும் பிரதமர் அலுவலகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் மோடியிடம் உக்ரைன் போர் தொடர்பான ரஷ்யாவின் அடிப்படை மதிப்பீடுகள் குறித்து ரஷ்ய அதிபர் புதின் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மீண்டும் படப்பிடிப்பில் பாரதிராஜா

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *