மகன் தாலி கட்டியதை பார்த்து, நெப்போலியன் கண்களில் திரண்ட கண்ணீர்!

இந்தியா

நெப்போலியன் மகன் திருமணத்தில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடிகர்  நெப்போலியனின் மகன் தனுஷ் மற்றும் அக்சயா திருமணம் இந்திய நேரப்படி இன்று காலை 8 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தின்போது அக்‌ஷயா சந்தன நிற பட்டு சேலையும், தனுஷ் நீல நிற சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் அணிந்திருந்தார்.

திருமண மேடையில் நெப்போலியன் மற்றும் அவரது மனைவி சுதா, அக்‌ஷயாவின் தந்தை, தாய் ஆகியோர் மணமக்கள் அருகே அமர்ந்து தேவையான சம்பிரதாயங்களை செய்தனர். மேலும், தாலியை தனுஷின் தாய் சுதா எடுத்துக்கொடுத்தார். மகன் தாலி கட்டியதை பார்த்த போது, நெப்போலியனின் கண்கள் கசிய தொடங்கியது. தற்போது தனுஷ் – அக்‌ஷயா திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.

திருமண நிகழ்ச்சியில் சரத்குமார், ராதிகா, சுஹாசினி, குஷ்பு, மீனா, கார்த்தி, பாண்டியராஜன், விதார்த், கலா மாஸ்டர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். ஜப்பான் நாட்டின் இந்திய தூதர் சிபி ஜார்ஜ், அவரது மனைவி ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக, மெஹந்தி விழாவில் திரையுலகினர் பலரும் நடனமாடி மணமக்களை உற்சாகப்படுத்தினார்கள்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பிதழ் வழங்கிய நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நெப்போலியன் மகன் தனுஷுக்கு தசைப் பிடிப்பு சம்பந்தமான அரிய வகை பாதிப்பு இருப்பதால் அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேறிவிட்டார். அங்கு பல்வேறு நிறுவனங்களை அவர் நடத்தி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

அதிமுக உரிமையியல் வழக்கு: நீதிபதி விலகல்!

’’உயிரே’ பட கிளைமாக்ஸே வேற!’ – நடிகை மனிஷா கொயராலா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *