தனியார் ஹோட்டலில் இறந்துகிடந்த பெண் : விசாரணையில் சிக்கிய காதலன்!

இந்தியா

கர்நாடக மாநிலம் மைசூரில் காதலன் தனது காதலியை ஓட்டல் அறையில் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு பெரியபட்னா தாலுகாவைச் சேர்ந்த பெண், அபூர்வ ஷெட்டி. 21 வயதான இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் வகுப்பு படித்து வந்தார்.

இவரும் ஹிங்கல் கிராமத்தைச் சேர்ந்த 26 வயதாகும் ஆஷிக் என்பவரும் காதலித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி மைசூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

mysuru man murder his lover

இந்தநிலையில், செப்டம்பர் 1-ஆம் தேதி காலையில் விடுதி அறையிலிருந்து ஆஷிக் வெளியே சென்றார்.

அவர் மாலை வரையில் ஓட்டல் அறைக்கு திரும்பவில்லை. இதனால் அங்கு தங்கியிருந்த அறை பூட்டிக்கிடந்தது. இளம்பெண் மதிய உணவு எதையும் ஆர்டர் செய்யவில்லை.

விடுதி ஊழியர்கள் காதலர்கள் தங்கியிருந்த அறைக்கு போனில் தொடர்புகொண்ட போது, போனை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் தேவராஜா போலீசாருக்கு தகவல் அளிததனர்.

mysuru man murder his lover

காவல் ஆய்வாளர் திவாகர் தலைமையில் போலீசார் ஓட்டலுக்கு வந்து காதலர்கள் தங்கியிருந்த அறையைத் திறந்தபோது, அபூர்வ ஷெட்டி நிர்வாணமாக இறந்து கிடந்தார்.

அப்பெண்ணின் மூக்கிலிருந்து ரத்தம் மற்றும் வாயிலிருந்து நுரை வந்திருந்தது. உடனடியாக, அபூர்வ ஷெட்டி பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடல் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.

அபூர்வ ஷெட்டி பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து காதலன் ஆஷிக்கை தேடிவந்தனர்.

ஆஷிக்கின் தொலைபேசியை தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில், நேற்று (செப்டம்பர் 2) அதிகாலை போலீசார் ஆஷிக்கை கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது அவூர்வ ஷெட்டியை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள இருந்ததாக ஆஷிக் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் எதற்காக கொலை செய்தார் என்ற விவரம் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்று போலீசார் கூறுகின்றனர்.

முன்னதாக ஆஷிக் மற்றும் அபூர்வ ஷெட்டி காதலை பெற்றோர்கள் கண்டித்திருக்கின்றனர்.

ஆனால், அவர்கள் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

36 மணி நேரத்தில் 15 கொலைகள்: எங்கே போகிறது தமிழகம்? எடப்பாடி கேள்வி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *