மும்பை தீவிரவாத தாக்குதலின் 14வது ஆண்டு நினைவு தினம் இன்று (நவம்பர் 26) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து, தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்டிர அரசு மற்றும் மும்பை போலீசார் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 2008ஆம் ஆண்டு கடல்வழியாக வந்த லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள், மும்பையில் ஊடுருவி சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தி ஓபராய் ஹோட்டல், தாஜ் ஹோட்டல், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கொடூர தாக்குதல் நிகழ்த்தினர்.
இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டினர் உள்ளிட்ட 166 பேர் கொல்லப்பட்டனர். 320க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இறுதியில் இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு, இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகப் பார்க்கப்படுகிறது.
இந்த மும்பை தாக்குதலின் 14வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து, தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்டிர அரசு மற்றும் மும்பை போலீசார் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் தலைமைச் செயலாளர், காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த தாக்குதலில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ராப்பி கேபிரியேல் ஹோல்ட்ஸ்பெர்க் மற்றும் அவரது மனைவி ரிவ்கா ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
ஆனால் அவர்களுடைய 2 வயது சிறுவன் மோஷே மட்டும் உயிருடன் மீட்கப்பட்டான்.
ஜெருசலேமில் உள்ள மவுண்ட் ஆலிவ்ஸில் தனது தந்தையின் கல்லறையில் அஞ்சலி செலுத்திய மோஷே,
”தனக்கு நேர்ந்த சம்பவம் போன்று வேறு யாருக்கும் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து அவர், தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய செவிலித்தாய் சாண்ட்ராவின் துணிச்சல் குறித்து புகழ்ந்து பேசினார்.
மும்பை தாக்குதலின் 14வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே, புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
ஜெ.பிரகாஷ்
பாஜக கிளப்பிய பாகிஸ்தான் ஜிந்தாபாத்: பதிலடி கொடுத்த காங்கிரஸ்
டெல்லி அமைச்சர்: வெளியான அடுத்த வீடியோ – நெருக்கடியில் ஆம் ஆத்மி