சோனியா காந்திக்கு பத்திரிகை வைத்த அம்பானி

Published On:

| By Kavi

தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமண அழைப்பிதழை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து முகேஷ் அம்பானி வழங்கியிருக்கிறார்.

ஜூலை 12 ஆம் தேதி  ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் நடைபெறுகிறது. தனது மகனின் திருமண விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி.

திருமணத்துக்கு முந்தைய விருந்து நிகழ்ச்சியை கடந்த மார்ச் மாதம் நடத்திய முகேஷ் அம்பானி, உலக தலைவர்கள் பலரை இந்தியாவுக்கு வரவழைத்திருந்தார்.
மணமகன் ஆனந்த் அம்பானி சொகுசு கப்பலில் தனது நண்பர்களுக்கு விருந்து கொடுத்தார்.

ஜூலை 2ஆம் தேதி முகேஷ் அம்பானியும், நீட்டா அம்பானியும் 50 ஏழை பழங்குடியின ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர்.

இந்த மாதம் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் உள்ள ‘Jio World Convention Centre’ல் ஆனந்த் அம்பானி ராதிகா திருமணம் நடைபெறுகிறது.

திருமண ஏற்பாடுகள் களைகட்டி வரும் நிலையில் இத்திருமண விழாவிற்குப் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் வரவழைக்கப்பட்டிருக்கிறார். நாளை (. ஜூலை 5) சங்கீத் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில் ஜஸ்டின் பீபர் பாடவுள்ளார். அவருக்கு 10 மில்லியன் டாலர் அதாவது, 83 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

வரும் ஜூலை 12 திருமண நிகழ்ச்சியை தொடர்ந்து விருந்து, வரவேற்பு நிகழ்ச்சி என மூன்று நாட்கள் திருமண கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் முகேஷ் அம்பானி விஐபிகளுக்கு அழைப்பிதழ் வைப்பதில் பிஸியாக இருக்கிறார்.

அந்தவகையில் இன்று (ஜூலை 4), ஜன்பத் பகுதியில் உள்ள சோனியா காந்தி வீட்டுக்கு சென்ற முகேஷ் அம்பானி, மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து பத்திரிகை வைத்ததாக தகவல்கள் வருகின்றன.

சோனியாவின் வீட்டுக்கு அம்பானி காரில் சென்று வரும் வீடியோவை ஏ.என்.ஐ ஊடகம் வெளியிட்டுள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அம்பானிக்காகவும் அதானிக்காகவும் தான் பிரதமர் மோடி செயல்படுகிறார் என்று தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் வீட்டுக்கு அம்பானி சென்று வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

“நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது” – ஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சும் விளக்கமும்!

முன்ஜாமீன் கேட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர்: கரூர் நீதிமன்றம் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share