நாடாளுமன்ற அவைக்குள் மாஸ்க் அணியுமாறு எம்.பி.களுக்கு மக்களவை, மாநிலங்களவை தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள போதிலும், பிஎப்7 உருமாற்றம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மாநில அரசுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பிரதமர் மோடி இன்று மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். அதுபோன்று தமிழக முதல்வர் ஸ்டாலினும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்நிலையில் இன்று கூடியுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் எம்.பி.க்கள் மாஸ்க் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“அவை உறுப்பினர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். மாஸ்க் அணிந்து மக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்” என மாநிலங்களவை தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கர் வேண்டுகோள் விடுத்தார்.
அதுபோன்று மக்களவைக்கு முகக்கவசம் அணிந்து வந்த அவை தலைவர் ஓம்.பிர்லா, எம்.பி.க்கள் அவைக்குள் மாஸ்க் அணிந்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதையடுத்து எம்.பி.க்கள் மாஸ்க் அணிந்து பங்கேற்றுள்ளனர்.
பிரியா
கட்சி சின்னம், பெயர் விவகாரம்: ஓபிஎஸ்க்கு நோட்டீஸ்!
உதயநிதியால் எனக்கு பாரம் குறைந்தது: அமைச்சர்!