morocco earthquake death toll

மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் பலி!

இந்தியா

மொராக்கோவில் இரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 296 பேர் உயிரிழந்துள்ளனர்.

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று (செப்டம்பர் 8)  இரவு 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது மாரகேஷ் பகுதியில் 18.5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான இந்த சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இரவு நேரம் என்பதால் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதனால் அங்கு மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 296 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “மொராக்கோவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் மொராக்கோ மக்களுடன் உள்ளன.

தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது” என தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணி!

நூடுல்ஸ் : விமர்சனம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1