குஜராத் மோர்பி பாலத்தை முறையாக சீரமைக்கவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலம் மச்சு ஆற்றின் மீது தொங்கிக் கொண்டிருந்த மோர்பி தொங்கு பாலம் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி பாலம் திடீரென அறுந்து விழுந்ததில் 135 பேர் பலியாயினர்.
இந்த விபத்தில் மோர்பி மாவட்டத்தைச் சேர்ந்த 100 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் மீட்கப்பட்ட பலர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக பாலம் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட ஒரேவா நிறுவனத்தைச் சேர்ந்த 9 பேர் அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களாக இந்த பாலத்தை சீரமைப்பதாக கூறி பார்வையாளர்களுக்கு அனுமதி மறுத்து வந்த ஒரேவா நிறுவனம் பாலத்தை முறையாக சீரமைக்கவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த பால பராமரிப்பு பணிக்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான வேலையை மட்டுமே செய்திருப்பது அந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகள் மூலம் தெரியவந்திருக்கிறது.
ஜெ.பிரகாஷ்
டிஜிட்டல் திண்ணை: கொடநாடு வழக்கு- எடப்பாடியை விசாரிக்க தயாராகும் ஐஜி தேன்மொழி
சட்டத்தின் முட்டுச் சந்தில் அமைச்சர் அனிதா: கைதுக்குத் தயாராகும் அமலாக்கத்துறை!
Comments are closed.