குஜராத் மாநிலத்தில் மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 135 பேரில் குழந்தைகள் மட்டும் 55 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள பழமையான தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு அறுந்து விழுந்தது.
இந்த விபத்தில் 135 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அண்மையில் புனரமைக்கப்பட்ட இந்த பாலத்தில் கேபிள்களை மாற்றாமல் பெயின்ட் மட்டும் அடித்து அப்படியே திறந்திருக்கின்றனர்.
இதுதொடர்பாக, குஜராத்தைச் சேர்ந்த ஓரேவா நிறுவனத்தின் அதிகாரிகள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
விபத்தில் சிக்கி மோர்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
இந்தநிலையில் விபத்தில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் இறுதிப் பட்டியலை மோர்பி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மோர்பி பாலம் அறுந்து விழுந்ததில் பலியான 135 பேரில் 55 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 39 பேர் சிறுவர்கள், 16 பேர் சிறுமிகள் ஆவர். 18 மாத பச்சிளங்குழந்தை தொடங்கி 17 வயதுடைய சிறார்கள் வரை பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.
18 வயதுடைய 8 பேரும், 45 ஆண்கள், 35 பெண்கள் என மோர்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 100 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
கலை.ரா
வம்சி இதயத்தை கொள்ளையடித்த திருமூர்த்தி
கிரிக்கெட் சங்கத் தேர்தல்: அமைச்சரின் மகன் போட்டியின்றி தேர்வு!