செம்மனூர் ஜூவல்லரியை திறந்து வைத்த கும்பமேளா புகழ் மோனலிஷா

Published On:

| By Kumaresan M

சமீபத்தில் நடிகை ஹனி ரோஸ் பாலியல் புகார் கொடுத்ததால் செம்மனூர் ஜூவல்லரி அதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும், தான் தொடர்ந்து தனது கடை திறப்பு விழாவுக்கு நடிகைகளை அழைப்பேன் என்று பாபி கூறியிருந்தார்.

இந்த நிலையில், தனது புதிய கடை திறப்பு விழாவுக்கு இந்த முறை பாபி அழைத்தது கும்பமேளா புகழ் மோனலிஷாவை. இவரின் இயர்பெயர் மானி போஸ்லே.

கும்பமேளாவில் ஒரே வீடியோவில் இணையத்தில் வைரலாகி விட்டார். இதையடுத்து, இளைஞர்கள் இந்த இளம்பெண்ணை முற்றுகையிட, கும்பமேளாவில் தேவையில்லாத சம்பவங்கள் அரங்கேறியது. ஒரு கட்டத்தில் மோனலிஷாவை அவரின் தந்தை சொந்த ஊரான இந்தூருக்கு அனுப்பி விட்டார்.

இந்த நிலையில், கோழிக்கோட்டில் இன்று நடைபெற்ற செம்மனூர் ஜூவல்லரியின் புதிய கடை திறப்பு விழாவில் மோனலிஷா கலந்து கொண்டார். இதற்காக, தனது சகோதரருடன் அவர் கோழிக்கோடு வந்திருந்தார். திறப்பு விழாவில் மோனலிஷாவுடன் பாபி செம்மனூரும் கலந்து கொண்டார்.

பாலிவுட் படத்தில் நடிக்கவும் மோனலிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். சனோஜ் மிஸ்ரா இயக்கத்தில் டயரி ஆப் மணிப்பூர் என்ற படத்தில் நடிக்க போகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share