அரிய நிகழ்வு : கத்தார் அமீரை வரவேற்க பிரதமர் விமான நிலையம் சென்றது ஏன்?

Published On:

| By Kumaresan M

பொதுவாக உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வரும் போது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், செயலர்கள் தான் விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்பார்கள். மிக முக்கிய தலைவர்களின் வருகையின் போது மட்டுமே பிரதமர் நேரடியாக விமான நிலையத்திற்குச் செல்வார். அந்த வகையில், கத்தார் அமீர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்தானி நேற்று இந்திய வந்தபோது, பிரதமர் மோடி விமான நிலையத்துக்கே நேரடியாக சென்று வரவேற்றார். இது அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.Modi receive Qatar Amir in airport

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியா வந்த போது நேரடியாக விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றிருந்தார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதேபோல விமான நிலையத்திற்கே நேரில் சென்று ஒரு தலைவரைப் பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் “எனது சகோதரர் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை வரவேற்க விமான நிலையத்திற்குச் சென்றேன். அவரது இந்தியப் பயணம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். நாளை அவரை நான் நேரில் சந்தித்து ஆலோசிக்கவுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்..Modi receive Qatar Amir in airport

கத்தார் அமீர் நாளை பிப்ரவரி 18ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் சந்தித்து பேசுகிறார். முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு கத்தார் அமீர் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். கத்தாரில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசிக்கின்றனர். இதை, கருத்தில் கொண்டு கத்தார் அமீரை கவுரவிக்கும் வகையில், பிரதமரே நேரில் சென்று வரவேற்றதாக கூறப்படுகிறது. Modi receive Qatar Amir in airport

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share