மோடி தான் ‘பாஸ்’: ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ்

அரசியல் இந்தியா

பிரதமர் மோடி நேற்று(மே22) இரவு ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னி சென்றார். அவரை ஆஸ்திரேலிய உயர் அதிகாரி பேரி ஓஃபாரல் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

இன்று(மே23) இந்திய பிரதமர் மோடியும் , ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸும் சிட்னியில் நடந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்திய பிரதமர் மோடி மேடை ஏறியதும் அங்கு கூடி இருந்தவர்கள் ’மோடி மோடி’ என கரகோஷமிட்டதால் அரங்கமே அதிர்ந்தது.

இதனை அடுத்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனீஸ் பேசிய போது ’பிரதமர் மோடி தான் பாஸ் என்று கூறினார்.

மேலும் பேசிய அல்பனீஸ், பிரதமர் மோடி பிரபலமாக உள்ளதை, மற்றொரு பிரபலம் அமெரிக்க பாடகரான ராக்ஸ்டார் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனுடன் ஒப்பிட்டார்.

ரசிகர்கள் மத்தியில் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனுக்கு ” தி பாஸ்” என்ற பெயர் உண்டு.

சிட்னி மைதானத்தில் மோடியைப் பார்த்ததும் எழுந்த, வந்தே மாதரம், மோடி மோடி, பாரத் மாதா கி ஜெய் உள்ளிட்ட முழக்கங்கள் மற்றும் மோடிக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த அல்பனீஸ், புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனை விட மோடிக்கு புகழ் அதிகம் என்றார்.
தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது இந்தியப் பயணத்தை நினைவு கூர்ந்தார்.


நீங்கள் இந்தியாவைப் புரிந்து கொள்ள விரும்பினால், ரயிலிலும் பேருந்திலும் பயணம் செய்யுங்கள் என்றார். மார்ச் மாதம் நான் இந்தியாவில் இருந்தபோது, குஜராத்தில் ஹோலி கொண்டாடியது, டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தது, மறக்க முடியாத தருணங்கள் ஆகும். இந்திய பயணம் மகிழ்ச்சியான பயணமாக இருந்தது.

பிரதமராக தனது முதல் ஆண்டை இன்று கொண்டாடுவதாகவும், நான் எனது நண்பரான பிரதமர் மோடியுடன் மேடையில் நிற்பது மிகவும் சிறப்புமிக்க தருணம் என்றும் கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *