ரஷ்ய – உக்ரைன் போரை மோடியால் நிறுத்த முடியும்: அமெரிக்கா

இந்தியா

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி, கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் ஆகியும் இன்னும் முடிவுறாமல் தொடர்ந்துகொண்டிருக்கிற நிலையில்,  ‘மோடியால் புதினைச் சமாதானப்படுத்தி போரை நிறுத்த முடியும்’ என்று அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியிருக்கிறார்.

உக்ரைன், நேட்டோவில் சேர விருப்பம் தெரிவித்ததையடுத்து மூண்ட இந்தப் போரில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் உட்பட மேற்கத்திய நாடுகள் பல ரஷ்யாவுக்குத் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தாலும், ரஷ்ய அதிபர் புதின் தன் முடிவை மாற்றிக்கொள்வதாக இல்லை.

இந்த நிலையில்,  ‘மோடியால் புதினைச் சமாதானப்படுத்தி போரை நிறுத்த முடியும்’ என்று அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியிருக்கிறார்.

நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் உக்ரைன் போரை நிறுத்த அல்லது புதினைச் சமாதானப்படுத்த மோடி தாமதமாகி விட்டாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜான் கிர்பி,

“போரை நிறுத்த புதினுக்கு இன்னும் நேரம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். பிரதமர் மோடியால் அவரை சமாதானப்படுத்த முடியும்.

பிரதமர் மோடி எத்தகைய முயற்சியை மேற்கொள்ளத் தயாராக இருந்தாலும் அதைப் பேச அனுமதிப்பேன்.

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் எந்தவொரு முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும். இன்றைக்கே போர் முடிவுக்கு வர வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்” என்றார்.

ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய நாள்முதலே பேச்சு வார்த்தை ஒன்றுதான் இதற்குத் தீர்வு என்ற நிலைப்பாட்டையே இந்தியா கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

“ஜார்கண்ட் அடித்தட்டு மக்களுக்காக உழைப்பேன்”: சி.பி.ராதாகிருஷ்ணன்

இந்துத்துவம் ஏன் காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கிறது?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *