அதி தீவிர புயலாக வலுவடைந்தது மோக்கா புயல்!

இந்தியா

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மோக்கா புயல் இன்று (மே 12) காலை அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் மோக்கா புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் நேற்று மாலை தீவிர புயலாக வலுவடைந்தது.

இந்நிலையில் போர்ட்பிளேயருக்கு மேற்கே மத்திய வங்கக் கடலில் இன்று காலை அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளது.  இதனையடுத்து மோக்கா புயலின் நகரும் வேகம் 7.கி.மீ.லிருந்து 9 கி.மீட்டர் ஆக அதிகரித்துள்ளது.

வடக்கு வடகிழக்கு திசை நோக்கி நகரும்  இந்த புயல் வரும் 14ஆம் தேதி தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளுக்கு இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 175 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

ISSF World Cup: துப்பாக்கிச் சூட்டில் இந்திய ஜோடிக்கு தங்கம்!

இல்லாத சொத்துக்கு உரிமை கொண்டாடும் சிபிஐ!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0