இந்தியா – ஜப்பான் கூட்டு உச்சி மாநாடு: முதல்வர் கோரிக்கை!

இந்தியா

ஜப்பான்‌ வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவர்‌ இவிகுரோ நோரிஹிகோவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 29) காலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சென்னையில்‌ 2024 ஜனவரி மாதம்‌ நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள்‌ மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும்‌, தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்‌ சிங்கப்பூர்‌ மற்றும்‌ ஐப்பான்‌ நாடுகளுக்கு 9 நாட்கள் அரசு முறை பயணம்‌ மேற்கொண்டுள்ளார்.

கடந்த 23 ஆம் தேதி சிங்கப்பூர்‌ சென்ற முதல்வர், அங்கு தனது இரண்டு நாள்‌ பயணத்தை முடித்துக்‌ கொண்டு, 25ஆம் தேதி அன்று ஜப்பான்‌ நாட்டின்‌ ஒசாகா சென்றார்‌.

அங்கிருந்து புல்லட் ரயில் மூலம் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ வந்தடைந்த முதல்வர் ஸ்டாலின், மாலையில் ஜப்பான்வாழ் தமிழர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதன் தொடர்ச்சியாக இன்று காலை ஐப்பான்‌ வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவர்‌ இஷிகுரோ நோரிஹிகோ மற்றும் செயல்‌ துணைத்‌ தலைவர்‌ கசுயா நகஜோ ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அப்போது, ஜப்பான்‌ வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தமிழ்நாட்டில்‌ தொழில்‌ தொடங்குவதற்கு அளித்துவரும்‌ ஆதரவிற்கு நன்றி தெரிவித்ததுடன்,

தமிழ்நாட்டில்‌ அதிக அளவில்‌ தொழில்‌ முதலீடுகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌ என்றும், உலக முதலீட்டாளர்கள்‌ மாநாட்டில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுத்தார்‌.

மேலும், தமிழ்நாட்டில்‌ திறன்மிகுந்த மனிதவளம்‌ உள்ளதால்‌ 4.0 போன்ற தொழில்நுட்பப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ மேம்பட்ட உற்பத்திக்கான ஒரு மையத்தை தமிழ்நாட்டில்‌ அமைத்திடவும்,

இந்தியா – ஜப்பானிய கூட்டு உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில்‌ நடத்திட வேண்டுமென்றும்‌ கோரிக்கை விடுத்தார்‌.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்‌.பி. ராஜா, தொழிற்துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ எஸ்‌. கிருஷ்ணன்‌ உள்ள்ட்டோர் கலந்துகொண்டனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

’அக்னி நட்சத்திரம் முடிஞ்சாலும் 100 டிகிரி வெயில் இருக்கு’: மக்களே உஷார்!

ஐபிஎல் பைனல்: இன்றும் மழை குறுக்கிட்டால் யாருக்கு கோப்பை?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *