வெற்றிகரமாக ஏவப்பட்டு பூமிக்கு திரும்பியது ககன்யான் சோதனைக் கலன்!

இந்தியா

ககன்யான் திட்ட மாதிரி விண்கலத்தில் ஏற்பட்ட கடைசி நேர கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில், வெற்றிகரமாக இன்று(அக்டோபர் 10) விண்ணில் ஏவப்பட்டு, சோதனைக்கலன் மீண்டும் பூமிக்கு வந்து சேர்ந்துள்ளது.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இறங்கியது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ.

இத்திட்டம் வரும் 2025-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், அதற்குமுன் 3 கட்ட பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டது.

அதற்கான முதல் கட்ட பரிசோதனையாக ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து TV-D1 ராக்கெட் மூலம் ககன்யான் மாதிரி சோதனை விண்கலம் இன்று காலை 8 மணிக்கு செலுத்தப்படும் என்று இஸ்ரோ ஏற்கெனவே அறிவித்திருந்தது.

ஆனால் கடைசி 5 விநாடியில் சோதனை விண்கலத்தில் எரிபொருள் எரியூட்டப்படுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவுண்ட் டவுட் நிறுத்தபட்டு, முதற்கட்ட சோதனை முயற்சி ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார்.

வெற்றிகரமாக தரையிறங்கியது!

இந்த நிலையில், உடனடியாக கோளாறு சரிசெய்யப்பட்டு ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்தில் இருந்து காலை 10 மணிக்கு TV-D1 ராக்கெட் மூலம் ககன்யான் மாதிரி சோதனை விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ராக்கெட் ஏவப்பட்ட 90 விநாடியில் 17 கிலோமீட்டர் உயரத்தை தொட்டநிலையில் அதிலிருந்து சோதனைக் கலன் வெற்றிகரமாக பிரிந்தது.

அதனைத்தொடர்ந்து அடுத்த 9 நிமிடங்களில் சோதனைக்கலன் 3 பாரசூட்டுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் கடலில் பத்திரமாக இறங்கியுள்ளது.

ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து இஸ்ரோவில் உள்ள விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ககன்யான் சோதனை ஓட்ட கவுண்ட் டவுன் நிறுத்தி வைப்பு!

பகவந்த் கேசரி – விமர்சனம்

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *