பாட்னாவில் தண்ணீர் நிறைந்த குழியில் காணாமல் போன இரண்டு குழந்தைகளின் உடல் கிடந்த சம்பவம் பாட்னாவில் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னாவில், தங்களது குழந்தைகள் காணாமல் போய்விட்டதாக, இரண்டு குழந்தைகளின் பெற்றோர் நேற்று முன்தினம் (ஜூலை 14) கர்டானி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, காணாமல் போன குழந்தைகளை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று (ஜூலை 15) பாட்னாவின் பெயூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் அருகே, தண்ணீர் நிறைந்த குழியில் காணாமல் போயிருந்த குழந்தைகளின் உடல்கள் இறந்த நிலையில் சடலங்களாக கிடந்துள்ளனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, குழந்தைகளின் உடல்களை மீட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்திய வரும் காவல்துறையினர் குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
ஆனால், குழந்தைகளின் கை கால்கள் கட்டப்பட்டும், மார்பில் கத்தியால் குத்திய நிலையிலும் மற்றும் கண்களின் அருகே காயத்துடன் குழந்தைகளின் உடல் இருந்ததாகக் கூறி, குழந்தைகளின் உயிரிழப்பு சந்தேகமடைவதாக இருக்கிறது என்று குழந்தைகளின் குடும்பத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, குழந்தைகளின் இறப்பில் சந்தேகமடைந்த அந்தப் பகுதியினர், போராட்டத்திலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக பாட்னாவின் பல பகுதிகளில் கலவரம் ஏற்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: அனைத்து கட்சி கூட்டம் முதல் கனமழை வரை!
கிச்சன் கீர்த்தனா : கதம்ப சாம்பார்!
ஷாக் அடிக்குது மக்களே : அப்டேட் குமாரு
அமலுக்கு வந்தது மின் கட்டண உயர்வு : யூனிட்டுக்கு எவ்வளவு தெரியுமா?