Missile attack on Israel in retaliation: World leaders condemn Iran!

”இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் உக்கிரமாக தாக்குவோம்”: ஈரான் அதிபர் எச்சரிக்கை!

இந்தியா

இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தினால் அந்நாட்டையே அழிக்கும் விதமாக உக்கிரமாக பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அதிபர் மசூத் எச்சரித்துள்ளார்.

பாலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனான், ஏமன் ஆகிய நாடுகள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று (அக்டோபர் 1) இரவு இஸ்ரேல் நாட்டின் சில பகுதிகள் மீது ஈரான் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி அதிரடி தாக்குதல் நடத்தியது.

Iran's leader derides 'non-tactical retreat' as Pezeshkian defends appointments | Amwaj.media

ஈரானின் வெற்றி நெருங்கிவிட்டது!

இதுதொடர்பாக ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகர் அருகே உள்ள மூன்று ராணுவ தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஹிஸ்புல்லா இயக்கத் தலைவர் ஹசன் நசருல்லா, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கும், பாலஸ்தீன், லெபனான் மக்கள் கொல்லப்பட்டதற்கும் பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் உக்கிரமாக தாக்குவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாயமான உரிமைகளுக்காகவும், ஈரானில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்காகவும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு தீர்க்கமான பதிலடி கொடுக்கப்பட்டிருப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் தெரிவித்துள்ளார்.

Iran threaten 'crushing attacks' if Israel responds to missiles - CNA

அதனைத்தொடர்ந்து ஈரான் தலைவர் அலி காமேனி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நேர்மையான மக்களை இழக்க நேரிட்டாலும் இறுதியில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் ஈரானின் வெற்றி நெருங்கிவிட்டதாகவும் அலி காமேனி தெரிவித்துள்ளார்.

ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது – நெதன்யாகு

இதற்கிடையே ஈரானின் ஏவுகணை தாக்குதலால் பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,  தாக்குதல் முடிவுக்கு வந்த பிறகு அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

Netanyahu says Iran made a 'big mistake' with missile attack and 'will pay for it' | The Times of Israel

அப்போது அவர், ”ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் ராணுவத்தினர் இஸ்ரேல் ராணுவத்தின் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர். ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகவும், இதற்கு உரிய விலையை கொடுக்க நேரிடும் என்று நெதன்யாகு எச்சரித்தார்.

மேலும் ஈரான் அரசு தனது சொந்த மக்களின் நலன்களை விட பிராந்திய மோதல்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இஸ்ரேல் உங்களுடன் நிற்கிறது என்பதை ஈரான் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும், உலக நாடுகள் இஸ்ரேலுடன் துணை நிற்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தலைவர்கள் கண்டனம்!

இஸ்ரேல் மீதான ஈரானின் இந்த அதிரடி தாக்குதலை ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஈரான் தாக்குதலை அடுத்து இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இணைந்துள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

இடிந்து விழுந்த கட்டடத்தில் இருந்து பறந்து வந்த செங்கல்: போலீஸ்காரரைத் தாக்கிய அதிர்ச்சி வீடியோ!

ஹெல்த் டிப்ஸ்: எப்போதும் வெந்நீர் குடிப்பது ஆரோக்கியமானதா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *