அம்மாக்களும் இனி பிரபஞ்ச அழகி ஆகலாம்!

இந்தியா

பிரபஞ்ச அழகி போட்டியில் திருமணம் ஆன பெண்கள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த பெண்கள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பிரபஞ்ச அழகி போட்டியை அமெரிக்காவில் உள்ள பிரபஞ்ச அழகி நிறுவனம் நடத்தி வருகிறது.

இந்த அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பிரபஞ்ச அழகியாக வலம் வர வேண்டும் என்பது பல மாடல் அழகிகளின் கனவாக இருக்கிறது.

ஆனால் இந்த போட்டியில் 18 வயதிலிருந்து 28 வயது வரை உள்ள திருமணம் ஆகாத பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற விதிமுறைகள் உள்ளன.

இதனால் பிரபஞ்ச அழகி பட்டம் பெறுவதற்காக பெண்கள் சிலர் திருமணம் செய்யாமல் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

miss universe competition

தற்போது இந்த விதிமுறையை மாற்றி அமைக்கப் போவதாகப் பிரபஞ்ச அழகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு 72 ஆவது பிரபஞ்ச அழகி போட்டியில் இனி திருமணம் ஆன பெண்களும், குழந்தை பெற்றெடுத்த பெண்களும் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்ட ஆண்ட்ரியா மெசா இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

miss universe competition

மேலும், இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களும் பிரபஞ்ச அழகி போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் விதிகளின் காரணமாக அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. தற்போதைய அறிவிப்பின் காரணமாகப் பெண்கள் பொழுதுபோக்கில் தங்களது வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று கூறியுள்ளார்.

சினிமா, விளையாட்டு, அரசியல் அனைத்து துறைகளிலும் திருமணம் ஆன பெண்கள் சாதித்து வருகின்றனர். ஆனால் அழகி போட்டிகளில் மட்டும் திருமணமான பெண்களுக்கென்று ஒரு இடம் இல்லாமல் இருந்து வந்தது. தற்போதைய அறிவிப்பின் மூலம் பல பெண்கள் தங்கள் கனவுகளுக்காகச் செயல்படத் தொடங்குவார்கள்.

2022 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்னாஸ் சந்து வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

மோனிஷா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0