அமெரிக்காவில் உள்ள நியூயார்க் ஸ்டேடன் தீவில் நடைபெற்ற முதல் மிஸ் இலங்கை அழகிப்போட்டியில் ஏற்பட்ட மோதல் காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நியூயார்க்கில் உள்ள ஸ்டேட்டன் தீவில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 21) மிஸ் இலங்கை அழகிப்போட்டி நடைபெற்றது.
அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த இலங்கை மக்கள் அதிக அளவில் வசிக்கும் ஸ்டேட்டன் தீவில் இந்த போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது.
14 போட்டியாளர்கள் கலந்து கொண்ட மிஸ் இலங்கை அழகிப்போட்டியில், 300-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். ஏஞ்சலினா குணசேகரா இந்த போட்டியில் மிஸ் இலங்கை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதால் அங்குள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த போட்டியானது நடத்தப்பட்டது
போட்டிக்கு பிறகு நடைபெற்ற விருந்தில் மோதல் ஏற்பட்டது. இதில் ஆண்களும், பெண்களும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மோதலுக்கான காரணம் இன்னும் முழுமையாக தெரிய வரவில்லை. இந்த மோதலின் போது அங்குள்ள மேசைகள் மற்றும் நாற்காலிகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த கலவரம் தொடர்பாக நியூயார்க் போலீசார் பலரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு இலங்கையில் உள்ள மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த கலவரத்தின் மூலம் அமெரிக்காவில் தங்கள் நாட்டின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
செல்வம்
கோவை பயங்கரம் : மேலும் ஒருவர் கைது!
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!