வடகொரியாவிலிருந்து ரஷ்யாவுக்கு 7,000 கண்டெய்னர்களில் ராணுவ உபகரணங்கள்!

Published On:

| By Kavi

Military equipment in 7000 containers

Military equipment in 7000 containers

வடகொரியாவிலிருந்து ரஷ்யாவுக்கு இதுவரை சுமார் 7,000 கண்டெய்னர்களில் ராணுவ ஆயுதங்கள், வாகனங்கள், வெடிபொருட்கள், பல்வேறு ஏவுகணைகள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவலை தென்கொரிய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த நிலையில் உக்ரைனின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒடெஸா நகரில் ரஷ்யா  நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர், 53 பேர் காயமடைந்தனர்.

ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடைபெறும்போது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், அண்மைக் காலத்தில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியுள்ள மிக மோசமான தாக்குதல் என்று கூறப்படுகிறது.

உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியா, பெலாரஸ் உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளன.

இந்த நிலையில், வடகொரியாவிலிருந்து ரஷ்யாவுக்கு இதுவரை சுமார் 7,000 கண்டெய்னர்களில் ராணுவ ஆயுதங்கள், வாகனங்கள், வெடிபொருட்கள், பல்வேறு ஏவுகணைகள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவலை தென்கொரிய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், ரஷ்ய அதிபர் புதினும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கான ஆயுத விநியோகம் வேகமெடுத்திருப்பதாகவும் தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

வடகொரியாவிலிருந்து கடல் வழியாக மட்டுமன்றி ரயில்களிலும் ஆயுத பரிமாற்றம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மறுபுறம், ரஷ்யாவிலிருந்து வடகொரியாவுக்கு கண்டெய்னர்களில் பல்வேறு உபகரணங்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும், அதிலும் பெரும்பாலான கண்டெய்னர்களில் வடகொரியாவுக்கான எரிபொருட்கள் அனுப்பப்படுவதாகவும் தென்கொரியா சந்தேகிக்கிறது.

எனினும், வடகொரியாவிலிருந்து ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான தகவலை இருதரப்பும் மறுத்துள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, வடகொரியாவும் தங்களிடமுள்ள ராணுவ ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் பரிசோதனைகளை அதிகளவில் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு காவல்துறையில் பணி!

ஒர்க் ஃப்ரெம் ஹோம்: டெல் நிறுவனம் அதிரடி!

பியூட்டி டிப்ஸ்: உங்கள் தலைமுடிக்குப் பிரச்சினையே தராத  ஷாம்பூ இது!

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel