கிச்சன் கீர்த்தனா : மேத்தி கோட்டா

Published On:

| By christopher

Methi na gota Recipe

குஜராத்தில் உள்ள எல்லா சிற்றுண்டிக் கடையின் மெனுவிலும், குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் வீடுகளிலும் குறிப்பாக குஜராத்தி திருமணங்களில் இந்த மேத்தி கோட்டா இடம்பெறும். நீங்களும் இதைச் செய்து மழைக்கு இதமாக ருசிக்கலாம்.

என்ன தேவை?

கடலை மாவு, சோள மாவு – தலா அரை கப்
சோடா உப்பு – ஒரு சிட்டிகை
பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரை – கால் கப்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
இஞ்சித் துருவல், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்
ஓமம் – அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

எண்ணெய் தவிர்த்து மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். இத்துடன் 2 டேபிள்ஸ்பூன் சூடான எண்ணெய் விட்டுக் கிளறி, தேவையான அளவு தண்ணீர் தெளித்துப் பிசைந்து, உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வெந்தயக்கீரை சேர்த்துள்ளதால் அதுவே தனிச்சுவை கொடுக்கும். அதனால், சைடிஷ் இல்லாமலும் சாப்பிடலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பட்டாணி பக்வான்

சண்டே ஸ்பெஷல்: வீக் எண்டில் விருந்து… அடுத்த நாள் பட்டினி… இந்தப் பழக்கம் சரியா?