தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்சாரத் துறை கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தது.
இதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் 2022 டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகு பிப்ரவரி 15 ஆம் தேதி அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இணையத்தளம் வாயிலாகவும் நேரடியாகவும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதால், குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் பாதிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரி அரசும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் மற்றும் அரசு துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை இணைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
மணிப்பூர்: அதிகாலையில் நிலநடுக்கம்!
களைகட்டும் பழனி கோவில்: இன்று மாலை தேரோட்டம்!
பார்டர்-கவாஸ்கர் டிராபி : ‘டூப்ளிகேட்’ அஸ்வினை களமிறக்கிய ஆஸ்திரேலியா