இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும், பிரதமர் மோடியும் எடுத்துக்கொண்ட செல்ஃபி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 4 நாள் பயணமாக மோடி இத்தாலி சென்றுள்ளார். இந்த மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு (AI) ஆற்றல், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் தொடர்பான பிரச்சனைகளை மையமாக வைத்து மோடி உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் நடைபெற்றது. இதுதவிர உலக தலைவர்களின் நட்பு மற்றும் அன்பான அரவணைப்பு குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறிப்பாக இத்தாலி பிரதமர் மெலோனி மற்றும் பிரதமர் மோடி இருவரும் எடுத்துக்கொண்ட செல்பி இணையத்தில் பரவி வருகிறது.
ஒரு வீடியோவில், ’மெலோடி டீமிடம் இருந்து ஹலோ’ ( Hello from the Melodi team – Meloni, modi) என்று கூற பின்னால் பிரதமர் மோடி சத்தமாக சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
இவர்கள் இருவரது செல்பி வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது முதன்முறை அல்ல.
கடந்த ஆண்டு துபாயில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இரு தலைவர்களும் கலந்துகொண்டனர். அப்போது எடுத்த செல்ஃபியை மெலோனி தனது சமூக வலைதளத்தில் சிறந்த நண்பருடன் என்று குறிப்பிட்டு #Melodi என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்திருந்தார்.
அப்போது அந்த புகைப்படம் 4.7 கோடி பார்வைகளை பெற்றது. இந்தநிலையில் இன்று வெளியிட்ட வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஈரோடு கூத்துப்பட்டறையின் ஆத்ம தரிசனம்!
திருப்பத்தூர்: கார் பார்க்கிங்கில் பதுங்கிய சிறுத்தை பிடிபட்டது!