மன்னர் சார்லசுக்கும் இந்த இந்திய பெண்ணுக்கும் அப்படி என்ன கனெக்‌ஷன்?

இந்தியா

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசுக்கு இந்தியா மீது மிகுந்த அபிமானம் உண்டு. இந்தியாவுக்கு அடிக்கடி வருகை தருவது உண்டு. சமீபத்தில் கூட பெங்களூருவுக்கு ரகசியமாக வந்து ஆயுர்வேத சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளார். இந்த நிலையில் , மன்னர் சார்லஸின் தனிப்பட்ட செயலாளராக இந்திய பெண் ஒருவர் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் முன்னா சம்சுதீன். இவர், நாட்டிங்காம் பல்கலையில் கணக்கு மற்றும் இன்ஜீனியரிங் பிரிவில் பட்டம் பெற்றவர். பின்னர், பிரிட்டன் ஃபாரின் சர்வீசும் படித்தார். தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் காராச்சி பிரிட்டன் தூதரகங்களில் பணியாற்றினார். தற்போது, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசின் தனி செயலாளராக பணி அமர்த்தப்பட்டுள்ளார்.

மன்னர் சார்லஸின் வெளிநாட்டு பயணங்கள் உள்ளிட்டவற்றை பார்த்துக் கொள்ள வேண்டியது இவரின் பொறுப்பாகும். உலக நாடுகளின் தலைவர்கள் மன்னர் சார்லசுக்கு எழுதும்  கடிதங்களுக்கு பதில் அனுப்புவதும் இவரது முக்கிய பணியாகும். மிகுந்த திறமையும் நம்பிக்கையும் கொண்டவர்களிடத்தில் இத்தகைய பணி ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாவின் திறமையும் அர்ப்பணிப்பு உணர்வும் அவரை இத்தகைய நிலைக்கு உயர்த்தியுள்ளதாக கூறுகிறார் முன்னாவின் தந்தை சம்சுதீன். இவர் ஒரு புகழ் பெற்ற வக்கீல் ஆவார். இங்கிலாந்து, அமெரிக்கா, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் பணியாற்றியுள்ளார்.

முன்னா சிறு குழந்தையாக இருந்த போது, அடிக்கடி பெற்றோருடன் சொந்த ஊரான காசர்கோட்டுக்கு வந்து சென்றுள்ளார். கடைசியாக முன்னா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காசர்கோடு வந்து சென்றதாக உறவினர்கள் கூறுகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

மக்களே அலர்ட்… இன்று மதியம் உருவாகிறது புயல் – வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்!

இதை எதிர்பார்க்கவே இல்லையே… விர்ரென ஏறிய தங்கம் விலை!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *