‘தொடர்ந்து பிச்சை எடுப்பேன்’ – ரூ.7.5 கோடி சொத்து சேர்த்த பிச்சைக்காரர் பேட்டி!

Published On:

| By Minnambalam Login1

இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பெயர் பாரத் ஜெயின்.

மும்பையை சேர்ந்த இவரின் குடும்பத்தினர் மிகவும் வறுமையான சூழலில் இருந்துள்ளனர். குடும்ப வறுமையை பார்த்து, மற்றவர்கள் வேலைக்கு செல்வது போல, பாரத் ஜெயின் பிச்சை எடுக்க முடிவு செய்துள்ளார். மும்பையில் சிவாஜி ரயில் நிலையம், ஆசாத் மைதானம் போன்றவைதான் பாரத் ஜெயின் பிச்சை எடுக்கும் முக்கிய இடங்கள்.

முதலில் தினமும் 2000 முதல் 2,750 வரை வருமானம் கிடைத்துள்ளது. மாதம் 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் சுளையாக வந்துள்ளது. கடந்த 40 வருடங்களாக பிச்சையெடுத்த பாரத் ஜெயின் பண மழையில் குளித்து வருகிறார். பாரத் ஜெயின் வறுமையில் உழன்றாலும் தனது குடும்பத்தினரை மும்பையில் ஒன்றரை கோடி மதிப்புள்ள இரண்டு அறை கொண்ட பிளாட்டில் வசிக்க வைத்துள்ளார்.

இந்த பிளாட்டில் தனது மனைவி, இரு மகன்கள், தந்தையுடன் வசிக்கிறார். தானேவில் இரு கடைகளும் அவருக்கு சொந்தமாக உள்ளன. அவற்றில் இருந்து வாடகையாக மாதம் 30 ஆயிரம் கிடைக்கிறது. சொந்தமாக பாரத் ஜெயினுக்கு மளிகைக் கடையும் உள்ளது. அதனால், பல முனைகளில் இருந்து வருவாய் கிடைக்கிறது. இவரின், இரு மகன்களும் கான்வென்டில் படித்தவர்கள். இப்போது,குடும்பம் தொடர்பான பிசினசை பார்த்து கொள்கின்றனர். தற்போது, மொத்தம் 7.4 கோடிக்கு மும்பையில் மட்டும் பாரத் ஜெயினுக்கு சொத்து உள்ளது. எனினும், பிச்சை எடுப்பதை அவர் இன்னும் விட்டு விடவில்லை.

இது குறித்து பாரத் ஜெயின் கூறுகையில், ‘இந்த வாழ்க்கைதான் எனக்கு செல்வத்தை கொடுத்துள்ளது. எனவே, அந்த பழக்கத்தை எளிதாக என்னால் மாற்றிக் கொள்ளமுடியவில்லை. நான் பிச்சை எடுத்தாலும் அறப்பணிகள் மேற்கொள்கிறேன். கோவில்களுக்கு நன்கொடை வழங்குகிறேன்’ என்கிறார்.

பணக்கார நகரமான மும்பையில் பெரும்பாலான பிச்சைக்காரர்கள் லட்சாதிபதிகளாக இருப்பதை காண முடியும். சமீபத்தில், சந்திரா ஆசாத் என்ற பிச்சைக்காரர் ரயில் விபத்தில் உயிரை இழந்தார். அப்போது, அவரது பையில் இருந்து ஒன்றரை லட்சம் பணத்தை போலீசார் எடுத்தனர். அவரின் வங்கிக்கணக்கிலும் 8.77 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிச்சை எடுத்தாலும் எங்கு எடுக்கனுமோ.., அங்கு எடுத்தால் லட்சாதிபதி ஆகிடலாம் போலயே!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

முஸ்லிம்கள் குறித்து நீதிபதி சர்ச்சை பேச்சு… விளக்கம் கேட்கும் உச்சநீதிமன்றம்!

இந்தியாவில் 3 முறை எம்.எல்.ஏவான ஜெர்மன் சிட்டிசன்; இந்திய குடியுரிமை பறிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel