திருமணத்திற்கு பிறகு எடை கூடியதால், கணவன் விவாகரத்து கேட்டு தொல்லை செய்வதாக மனைவி புகார் அளித்துள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலம், மீரட், ஃபதேபூரைச் சேர்ந்த சல்மான் என்பவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜாகிர் காலனியில் வசிக்கும் நஸ்மா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும் உள்ளார்.
இந்நிலையில் சல்மான், தனது மனைவியின் எடை அதிகரித்து குண்டாக தெரிவதால் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விவாகரத்து கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார்.
மேலும் அவரை அவமானப்படுத்தி உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். இதனால் சல்மான் மற்றும் நஸ்மா இடையே அடிக்கடி சண்டைகளும் வந்துள்ளன.
”திருமணத்திற்கு பிறகு என் உடல் எடை அதிகரித்ததால் அடிக்கடி அவமானப்படுத்தி தாக்கினார். ஒரு மாதத்திற்கு முன்பு என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டு விவாகரத்து ஆவணங்களை அனுப்பியுள்ளார்.

உடல் எடை அதிகரித்ததால் என்னுடன் வாழ விரும்பவில்லை என்று நேரடியாகக் கூறிவிட்டார்.
என் கணவர் விவாகரத்து கேட்டிருக்கும் நிலையில் நான் இன்னும் தன் கனவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், விவாகரத்து வேண்டாம்” என்றும் தெரிவித்துள்ளார் நஸ்மா.
நீதி கேட்டு மீரட்டில் உள்ள லிசாரி கேட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நஸ்மா.
மோனிஷா
போக்குவரத்து நெரிசலால் 3% விவாகரத்து!