மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து பத்திரிகையாளர் கேள்வி கேட்ட நிலையில் மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி திரும்பி கூட பார்க்காமல் தெறித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது..
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகவும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரிஜ் பூஷன் சரண் சிங் இருக்கிறார்.
இவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இவர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வழக்கு பதிவு செய்தாலும் கூட பிரிஜ் பூஷண் சரண் சிங் கைது செய்யப்படவில்லை. இதனால் அவரை கைது செய்யக்கோரி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், புதிய நாடாளுமன்ற திருப்பு விழாவின் போது டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து பேரணியாக மல்யுத்த வீரர்கள் சென்றனர். அப்போது போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
மேலும், 7 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்தன.
இதனிடயே, தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை எனக்கூறி நாட்டுக்காக வென்ற பதக்கங்களை நேற்று(மே30) கங்கை ஆற்றில் வீச முடிவு செய்தனர்.
பின்னர், விவசாய சங்க தலைவர் நரேஷ் தியாகத் மல்யுத்த வீரர்களுடன் பேசி அந்த போராட்டத்தை கைவிட வைத்தார்.
இந்நிலையில், நேற்று(மே30) மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகியிடம் கேள்வி கேட்க பத்திரிகையாளர் முயன்றார்.
அப்போது அந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த மீனாட்சி லேகி அவரிடம் இருந்து விலகி சென்றார். இருப்பினும் பத்திரிகையாளர் அவரை பின்தொடர்ந்து கேள்விகள் எழுப்ப மீனாட்சி லேகி ஓட்டம் பிடித்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோ காட்சி தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தமிழ்நாட்டில் தொழிற்சாலையை அமைக்கும் ஓம்ரான்
மேட்டூர் அணை திறப்பு: தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்துங்கள் – ராமதாஸ்