உக்ரைனில் படித்த இந்திய மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி!

இந்தியா

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தேர்வுகள் எழுத ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையே கடுமையான போர் ஏற்பட்ட நிலையில் அங்கு மருத்துவப் படிப்பை மேற்கொள்வதற்காக சென்ற சுமார் 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் போர் காரணமாக நாடு திரும்பினர்.

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் தங்கள் கல்வியை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்து வந்தனர்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் ‘உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்வியை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.

மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது. மருத்துவக் கல்வியை சொந்த நாட்டிலேயே தொடர வழிவகை செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டது.  

இந்த நிலையில் உக்ரைனில் படித்து இந்தியாவில் எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேராமல் இருக்கும் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பை வழங்குவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில் ‘உக்ரைனில் மருத்துவக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு இந்திய பாடத்திட்டத்தின் படி எழுத்து தேர்வு  நடத்தப்படும். செய்முறை தேர்வு சில குறிப்பிட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும்.

இந்தியாவில் நடைபெறும் தேர்வில் வெற்றி பெறுவோர் இரண்டு ஆண்டுகள் கட்டாய மருத்துவப் பயிற்சி பெற வேண்டும். உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்குப் பகுதி 1, 2 தேர்வுகளை எழுத வாய்ப்பு அளிக்கப்படும்” என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது.

ராஜ்

சுயாட்சிக் கொள்கை 2.0 !

கிச்சன் கீர்த்தனா: பஞ்சாபி சிக்கன் கறி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *