அனைவரும் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கிக் கொள்ளவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்கு மண்டாவியா தலைமையில் டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறைக்கான நிதி ஆயக்குரிய உறுப்பினர் வி.கே.பால் உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய வி.கே பால், நாட்டில் “27-28% மக்கள் மட்டுமே கூடுதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துள்ளனர்.
அண்டை நாடுகளில் உயரும் கொரோனா பாதிப்பு காரணமாக மூத்த குடிமக்கள், முன்னெச்சரிக்கை தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
மேலும், வரும் நாட்களில் முகக்கவசம் அணிவதை அனைவரும் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் மூடிய அரங்குகள் மற்றும் கூட்டம் அதிகம் சேரும் வெளிப்புறங்களிலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.
அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது என்ற காரணத்தினால் விமான சேவையில் ஏதேனும் மாற்றம் செய்யப்படக் கூடிய வாய்ப்பு உள்ளதா? என செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, இப்போதைக்கு மாற்றம் செய்ய எந்த தேவையும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
கலை.ரா
சிரிப்பு, அழுகை இரண்டும் கூடாது: இது எங்கு தெரியுமா?
மதுரை சரவணா ஸ்டோருக்கு தடைகேட்டு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு!