ஃபேஸ்புக் அதிபர் ஸக்கர்பர்க் 200 பில்லியன் சொத்து மதிப்பை எட்டியுள்ளார். உலகத்தின் 4வது பணக்காரராக அவர் மாறியுள்ளார்.
பேஸ்புக் அதிகர் மார்க் ஸக்கர்பர்க் சொத்து மதிப்பு 201 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. உலகில் 200 பில்லியன் சொத்து கொண்ட 4வது மனிதராக ஸக்கர்பர்க் மாறியுள்ளார். முதலிடத்தில் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் 272 பில்லியன் டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடத்தில் அமேசான் அதிபர் ஜெஃப் பெசோஸ் 211 பில்லியன் டாலர்களுடன் உள்ளார். 3வது இடத்தில் எல்.வி.ஹெச்.எம். தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் இருக்கிறார். இவருக்கு 217 பில்லியன் டாலர்கள் சொத்து உள்ளது.
நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில் பேஸ்புக் தாய் நிறுவனமான மெடாவின் ஷேர் மதிப்பு 560 டாலர்களாக உயர்ந்தது. இது வழக்கத்தை விட 60 சதவிகிதம் உயர்வு ஆகும். இதுதான், ஸக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர்களை எட்ட முக்கிய காரணமாக இருந்துள்ளது.
தற்போது , 40 வயதான மார்க் ஸக்கர்பர்க் கடந்த 2004 ஆம் ஆண்டு ஃபேஸ்புக்கை தொடங்கினார். உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்கள் ஈர்க்கப்பட்டு ஃபேஸ்புக் பக்கத்தை தொடங்கினர். விளைவாக பணம் கொட்ட தொடங்கியது. இப்போது, வாட்சப், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் போன்றவற்றையும் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நடத்தி வருகிறது.
உலகிலேயே 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சொத்துக்களை கொண்ட முதல் நபராக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் உருவானார் என்பது குறிப்பிடத்தக்கது. பெஸோஸ் ப்ளூ ஆரிஜின் என்கிற விண்வெளி ஆய்வு கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனத்தையும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையையும் நடத்தி வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஸ்டாலின் முதலமைச்சரா? செந்தில் பாலாஜியின் வழக்கறிஞரா?: ராமதாஸ் கேள்வி!
வெட்கப்படக்கூடிய பேச்சு : கார்கேவுக்கு அமித்ஷா கண்டனம்!