மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தற்போது ரத்து செய்யப்பட்ட மதுபான கொள்கை பணமோசடி வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கடந்த மாதம் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.
சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கு தொடர்பாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிசோடியாவை அமலாக்கத்துறை மார்ச் 9ஆம் தேதி கைது செய்தது.
அவரிடம் தொடர்ந்து விசாரித்து வந்த அமலாக்கப்பரிவு, விசாரணைக் காவல் முடிந்த நிலையில் சிசோடியாவை டெல்லி நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 22) ஆஜர்படுத்தியது.
அப்போது வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால்,
மணீஷ் சிசோடியாவை இரண்டு வார காலம் அதாவது ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
சிபிஐ விசாரித்து வரும் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நேற்று விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வரும் 25ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
ரயில் பயணிகளின் தொடர் குற்றச்சாட்டுகள் : யார் பொறுப்பு?
வாக்காளர் அட்டை – ஆதார் இணைப்பு: இறுதி அவகாசம் எப்போது?