டெல்லி துணை முதல்வருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: விரைவில் கைது!

இந்தியா

சிபிஐ சோதனையை தொடர்ந்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிற்கு எதிராக இன்று (ஆகஸ்டு 21) லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஆம் ஆத்மி அரசு பெரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரைத்தார். அதன்படி டெல்லி துணை முதலமைச்சரும் கலால் துறை அமைச்சருமான மனிஷ் சிசோடியாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 31 இடங்களில் சிபிஐ கடந்த 19ம் தேதி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு விதமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுபானக் கொள்கை மீறல் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் 12 பேருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

மேலும் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களில் கண்காணிக்கவும் சிபிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக மணிஷ் சிசோடியா விரைவில் கைது செய்யப்படுவார் என்கிறார்கள் டெல்லி ஊடக வட்டாரங்களில்.

கிறிஸ்டோபர் ஜெமா

டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ ரெய்டு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *