கலவரம்: இயல்பு நிலைக்கு திரும்பும் மணிப்பூர்

இந்தியா

மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீராகி வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் 53 சதவிகிதம் பேர் மெய்ட்டீஸ் சமூகத்தினர் வசிக்கின்றனர். இவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அம்மாநில அரசுக்கு மணிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் பட்டியலின மாணவ அமைப்பினர் மே 3-ஆம் தேதி சுரசந்த்பூர் பகுதியில் பேரணி நடத்தினர்.

இந்த பேரணியில் மெய்ட்டீ சமூகத்தினர் மற்றும் பழங்குடியின சமூகத்தினருக்கிடையே கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தின் போது வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

இதில் 11 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

கலவரம் பகுதிகளில் இருந்து 9000 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு துணை ராணுவத்தினரை மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது. கலவரக்காரர்களை கண்டதும் சுட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்களுக்கு மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசயா உய்கே அனுமதி கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று மணிப்பூர் முதல்வர் பிரண் சிங்கிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் அசாதாரன சூழல் நிலவரங்களை கேட்டறிந்துள்ளார்.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “மொரே, கங்க்போகி, இம்பால், சுரசந்த்பூர் பகுதிகளில் கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் ராணுவ படைகள் மணிப்பூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்

தி கேரளா ஸ்டோரி: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் வெளியாகிறது?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *