கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், இன்று (ஜூலை 24) மூன்றாவது நாளாக காலை 11 மணிக்கு தொடங்கியது.
இதையடுத்து, மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டன.
இதனால் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மக்களவையில் நடைபெறும் மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்துக்கு எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
https://twitter.com/ANI/status/1683351366188802048?s=20
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மின்சார இணைப்பு பெயர் மாற்றம்: சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் என்ன?