manipur earthquake in 4.0 magnitud

மணிப்பூர்: அதிகாலையில் நிலநடுக்கம்!

இந்தியா

மணிப்பூரில் இன்று (பிப்ரவரி 4) அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் 4.0 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து வடகிழக்கே 80 கிமீ தொலைவில் அமைந்துள்ள உக்ருல் மாவட்டத்தில் இன்று காலை 6.14 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.0 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக நேற்று (பிப்ரவரி 3) இரவு 9.31 மணியளவில் மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா பகுதிகளில் 3.2 ரிக்டர் அளவில் 5 கிலோ மீட்டர் ஆழத்திற்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் குறித்த தேசிய நில அதிர்வு மையத்தின் சமீபத்திய அறிக்கையின் படி கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்திய எல்லைக்குள் 33 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

இதில் மகாராஷ்டிரா மற்றும் இமாசல பிரதேசத்தில் தலா 6 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

களைகட்டும் பழனி கோவில்: இன்று மாலை தேரோட்டம்!

ஈரோட்டில் எடப்பாடி அவசர ஆலோசனை!  பொதுக்குழு நடத்த சாத்தியம் உண்டா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *