மணிப்பூர் தலைமை நீதிபதியை மாற்ற பரிந்துரை!

இந்தியா

வன்முறை வெடித்திருக்கும் மணிப்பூர் மாநில தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரனை கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வருபவர் நீதிபதி எம்.வி.முரளிதரன். வேலூரைச் சேர்ந்த இவர் முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆவார்.

தன்னை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற கொலீஜியத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.அவரது கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், அவரை கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

கடந்த மார்ச் 27 அன்று நீதிபதி முரளிதரன் மேதி சமுதாய மக்களுக்குப் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பு காரணமாக குகி மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு போராட்டங்கள் வெடித்தன. அது  வன்முறையாக மாறி இன்றுவரை மாநிலத்தில் அமைதி நிலை திரும்பவில்லை. இதற்கு நீதிபதி முரளிதரன் தீர்ப்பு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இந்த தீர்ப்பு தவறானது என்று தலைமை நீதிபதி சந்திர சூட் கூறியிருந்தார். இந்த தீர்ப்பை மாற்றிக்கொள்ள நீதிபதி முரளிதரனுக்கு வாய்ப்பு இருந்தும் கூட அவர் அதை பயன்படுத்தவில்லை என்று உச்ச நீதிமன்ற கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஆளுநர் மாளிகை நவராத்திரி கொலு: பொதுமக்களுக்கு அனுமதி!

ரூ.60 கோடி சொத்துகுவித்த அனிதா ராதாகிருஷ்ணன்: அமலாக்கத்துறை வாதம்!

+1
0
+1
1
+1
1
+1
6
+1
0
+1
4
+1
1

2 thoughts on “மணிப்பூர் தலைமை நீதிபதியை மாற்ற பரிந்துரை!

  1. Manipur unrest was created by JusticeMuralidar’s judgement which was not solved till date by the state or union govt even never try to solve and want to make favour votes

  2. Manipur Chief Justice should be transferred immediately from Manipur to save Manipur at any cost.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *