கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு வருகை தந்து மக்களை சந்தித்த ராகுல்காந்திக்கு அம்மாநில பா.ஜ.க தலைவர் இன்று (ஜூலை 1) பாராட்டு தெரிவித்துள்ளார்.
அறுபது நாட்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வரும் மணிப்பூருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக சென்றிருந்தார்.
கடந்த மாதம் 29ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்று அங்கிருந்து சாலைமார்க்கமாக கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு செல்ல முற்பட்டார்.
ஆனால் பாதுகாப்பு காரணங்களை கூறி பாதி வழியிலேயே ராகுல்காந்தியை தடுத்தி நிறுத்தினர் போலீசார்.
இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் சுராசந்த்பூர் சென்று நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள், மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருடன் உரையாடினார். அதைத் தொடர்ந்து மாநில ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்தித்து பேசினார்.
ராகுல் காந்தியின் மணிப்பூர் பயணம் குறித்து பாஜக சார்பில் கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, பிடிவாதத்துடன் ராகுல் மணிப்பூருக்கு சென்றதாகவும், அங்கு செல்வதற்கு முன் அவர் அடிப்படை உண்மைகளை தெரிந்து வைத்திருக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில் மணிப்பூர் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சாரதா தேவி, மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களை காண வந்த ராகுல் காந்திக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை இன்று சந்தித்து அவர் பேசுகையில், “தற்போதைய சூழ்நிலையில், மணிப்பூர் மாநிலத்திற்கு வருகை தந்த ராகுல் காந்தியை நான் பாராட்டுகிறேன்.
தொடர்ந்து இங்குள்ள பதற்றத்தை தணித்து அமைதியை மீண்டும் கொண்டு வருவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது” என்று தேவி பேசியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
”கூட்டணி குறித்து பாஜக எங்களுடன் பேசி வருகிறது”: பன்னீர்
”குடும்பத்தை பற்றி பேசினால் பொறுத்து கொள்ள மாட்டேன்”-ஜெய்ஸ்வால் ஆவேசம்!