டெல்லியில் இளம்பெண்ணை காரில் மோதி நிர்வாணமாக இழுத்து சென்ற மாருதி பலேனோ காரை, விபத்து நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வாங்கியிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
வடமேற்கு டெல்லியில் உள்ள கஞ்சவாலா பகுதியில் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் அஞ்சலி சிங் என்ற பெண் பணி முடித்து தனது ஸ்கூட்டியில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஸ்கூட்டியில் இருந்து அவர் விழுந்ததும் அவரது உடல் காரின் அடிப்பகுதியில் சிக்கியது. அந்த கார் 13 கிலோ மீட்டர் தூரம் நிர்வாணமாக அவரது உடலை இழுத்து சென்றுள்ளது.
இந்த விபத்தின் சி சி டிவி காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் விபத்து ஏற்படுத்திய மாருதி பலேனோ கார் சில மணி நேரங்களுக்கு முன்பாக வாங்கப்பட்டதாகவும், இரண்டு நபர்களுக்கு கை மாறியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்க பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையில், “இந்த விபத்தின் போது காருக்குள் தீபக் கன்னா, உள்ளூர் பா. ஜ. க தலைவர் மனோஜ் மிட்டல், கிரிஷன், மிதுன், அமித் ஆகிய ஐந்து பேர் இருந்துள்ளனர்.
அதிகாலை 5 மணிக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. விபத்து நடந்த காரின் நம்பர் பிளேட்டில் இருந்து உரிமையாளரைக் கண்டுபிடிக்க போலீஸார் முயன்றனர்.
காரின் உரிமையாளரான லோகேஷிடம் விசாரணை நடத்தியதில் அவர் அசுதோஷிடம் காரை விற்றதாக தெரிவித்துள்ளார்.
அசுதோஷிடம் நடத்திய விசாரணையில் டிசம்பர் 31-ஆம் தேதி மாலை தீபக் கண்ணா என்பவரிடம் காரை விற்றுள்ளார்.
விபத்து நடந்தபோது தீபக் கண்ணா குடி போதையில் காரை ஓட்டியுள்ளார். அவருக்கு அருகில் இருந்த முன் பக்க சீட்டில் மனோஜ் மிட்டல் அமர்ந்திருந்துள்ளார்.
ஜோன்டி கிராமத்திற்கு அருகில் காரை நிறுத்தியபோது காருக்கு அடியில் பெண்ணின் உடல் சிக்கியிருப்பதை பார்த்ததாகவும், உடலை அங்கேயே விட்டுவிட்டு மீண்டும் அசுதோஷின் வீட்டிற்குச் சென்று காரை விட்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சலி சிங்கின் குடும்பத்தினர் அவர் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் போலீசார் அதனை மறுத்துள்ளனர்.
புத்தாண்டு அன்று நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
செல்வம்
யார் இந்த நீதிபதி பி.வி.நாகரத்னா?
வேலைவாய்ப்பு: அறநிலையத் துறையில் பணி!
“அண்ணாமலைக்கு கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை”: பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி