ரொம்ப லோன்லி… 4 பெண்களை திருமணம் செய்த ஆசாமி ; சிக்க வைத்த பேஸ்புக்!

Published On:

| By Kumaresan M

ரொம்ப லோன்லியா இருக்கேன் என்று கூறியே நான்கு பெண்களை திருமணம் செய்த ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் புலிமுக்கு பகுதியை சேர்ந்தவர் தீபு பிலிப். இவர், தன்னை அனாதை என்றும் தனக்கு யாருமில்லாததால் லோன்லியாக இருப்பதாகவும் கூறி 10 ஆண்டுகளுக்கு முன்பு முதல் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

முதல் மனைவியின் நகைகளை திருடிய பிலிப் அங்கிருந்து எஸ்கேப் ஆனார். பின்னர், தமிழ்நாட்டில் வசித்த தீபு பிலிப் காசர்கோட்டை சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் முடித்துள்ளார். இந்த பெண்ணையும் கைவிட்ட தீபு எர்ணாகுளத்துக்கு மாறியுள்ளார்.

அங்கும் ஒரு பெண்ணை ஏமாற்றியுள்ளார். தொடர்ந்து, பேஸ்புக்கில் ஆலாப்புழாவை சேர்ந்த பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இவரையும் தீபு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ஆலப்புழாவை சேர்ந்த பெண்ணுக்கு தீபுவின் இரண்டாவது மனைவி பேஸ்புக் வழியாக பழக்கமாகியுள்ளார். அப்போது, ஆலாப்புழா பெண்ணின் பேஸ்புக் பக்கத்தில் தனது கணவர் என்று தீபுவின் புகைப்படத்தை பகிர்ந்திருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.

உடனடியாக, ஆலப்புழா பெண்ணுக்கு தீபுவை பற்றி தகவல் கூறியுள்ளார். தொடர்ந்து, தீபுவின் 4வது மனைவி கொன்னி போலீசில் புகார் அளித்தார்.

இந்த, புகாரின் பேரில் நேற்று (பிப்ரவரி 10) கைது செய்யப்பட்ட தீபு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share