லக்னோவில் இளைஞர் ஒருவர் தாய் மற்றும் 4 சகோதரிகளை கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் ஆஸ்மா. இவருக்கு அர்ஷத் என்ற 24 வயது மகனும் அலியா, அலிஷா, ஆஸ்கா, ரஹ்மீன் ஆகிய 4 மகள்கள் இருந்தனர். அர்ஷத் ஆக்ராவில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி லக்னோ வந்த ஆஷ்மா, அவரின் கணவர் படார் உள்ளிட்ட குடும்பத்தினர் அங்குள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கினர்.
இந்த நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி இரவு தாய் , சகோதரிகளை கொலை செய்து விட்டு அர்ஷத் தப்பி விட்டார். ஹோட்டல் ஊழியர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொல்லப்பட்ட சகோதரிகள் அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள்.
ஹோட்டலில் நடத்திய விசாரணையில் அர்ஷத்தும், அவரின் தந்தை படார் ஆகியோர் மட்டும் காணாமல் போனது தெரிய வந்தது. தொடர்ந்து, போலீசார் ஆக்ராவில் பதுங்கியிருந்த அர்ஷத்தை பிடித்து கைது செய்தனர். விசாரணையில் ,குடும்பத்துக்குள் நடந்த பிரச்னை காரணமாக மன அழுத்தத்தில் 5 பேரையும் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
உணவில் மயக்க மருந்து கொடுத்தும், மது கொடுத்தும் அவர்களை உறங்க வைத்து அனைவரையும் கொன்றதாக சொல்லப்படுகிறது. அதாவது, அனைவரின் கை நரம்பையும் அறுத்து விட்டுள்ளார். இதனால், ரத்தம் வெளியேறி அனைவரும் பலியாகியுள்ளனர். அர்ஷாத்தின் தந்தை படார் தலைமறைவாகவுள்ளார். இதனால், அவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது,.
ஹோட்டலில் மற்ற அறைகளில் தங்கியிருந்தவர்கள் தங்களுக்கு எந்த அலறல் சத்தமும் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது, வெளி வந்துள்ள தகவலின்படி, கொலை செய்வதற்கு முன்பு ஒரு வீடியோ ஒன்றை அர்ஷத் வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, ‘ தான் வசிக்கும் காலனியை சேர்ந்த மக்கள் என்னையும் சகோதரிகளையும் மனதளவில் துன்புறுத்தினர் என்னால் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. நாங்கள் வசித்த வீட்டையும் அபரிக்க முயல்கின்றனர். இதனால், நாங்கள் அங்கிருந்து வெளியேறி குளிரில் அலைந்து கொண்டிருந்தோம். அவர்களை தடுக்க முடியாத இயலாமையால் என் தாயையும் சகோதரியையும் என் கையாலேயே கொன்றேன் ‘என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்