துருக்கி நாட்டில் உடல் நலம் பாதித்த தனது குட்டியை வாயில் கவ்வி கொண்டு கிளினிக்குக்கு வந்த தாய்நாயின் அறிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஜனவரி 13 ஆம் தேதி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் தாய் நாய் ஒன்று சுயநினைவு இழந்த தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு அவசரம் அவசரமாக கால்நடை மருத்துவமனைக்கு வந்தது.
மழையில் நனைந்த குட்டி சுயநினைவு இழந்து கிடந்துள்ளது. இதை பார்த்து வேதனையடைந்த தாய் நாய் தன் குட்டியை காப்பாற்றும் முனைப்பில் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தது.
உடனே, அங்கிருந்த கால்நடை மருத்துவர்கள் நாய்க்குட்டிக்கு ஊசி போட்டனர் . அதன் ஈரமான உடலை பெட்ஷீட்டால் உலர்த்தி எடுத்தனர். மருத்துவர்களின் முயற்சியால் நாய்க்குட்டி உயிர் பிழைத்தது.
இப்போது இரண்டு நாய்க்குட்டிகளும் தாயுடன், தொடர்ந்து கிளினிக்கில் உள்ளன. இரு குட்டிகளும் உற்சாகமாக விளையாடிபடி உள்ளன. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவியது. தாய் நாயின் அறிவுப்பூர்வமான செயலை பாராட்டிய மக்கள் மருத்துவர்களின் உதவிக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.