announce next karnataka cm

கர்நாடக முதல்வர் யார்?: இன்று அறிவிக்கிறார் கார்கே

அரசியல் இந்தியா

அடுத்த கர்நாடக முதல்வர் யார் என்று போட்டி நிலவி வரும் சூழலில், முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (மே 17) அறிவிக்க உள்ளார்.

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 135 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்.

இருப்பினும் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கான போட்டி நிலவி வருகிறது.

சித்தாராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியதால், முதல்வரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பானது கட்சி மேலிடத்தில் ஒப்படைக்கப்படுவதாகப் பெங்களூரு தனியார் விடுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

announce next karnataka cm

இதனிடையே டி.கே.சிவக்குமாரை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று ஒக்கலிகா சமூகத்தினரும், சித்தாராமையாவை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று குருபாச சமூகத்தினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி துணை முதல்வர் பதவியை லிங்காயத், தலித் சமூகத்தினரும் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கே நேற்று (மே 16) ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது ராகுல் காந்தி, கார்நாடகாவை சேர்ந்த மூத்த தலைவர் நீங்கள் (மல்லிகார்ஜுன கார்கே) என்பதால் அம்மாநில அரசியல் உங்களுக்கு நன்றாக தெரியும். ஆகையால் முதல்வர் விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவெடுங்கள்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர், ஏழைகள் வாக்களித்ததாலே காங்கிரஸ் வெற்றி பெற்றது. அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை நாம் அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் கார்கேவின் இல்லத்தில் நேற்று அவரை டி.கே.சிவக்குமார் சந்தித்துள்ளார். அப்போது இருவரும் 45 நிமிடங்கள் பேசியுள்ளனர்.

அந்த சமயத்தில் சிவக்குமார், தனக்கு ஏன் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று விவரிக்கும் வகையிலான 25 அம்சங்கள் அடங்கிய கடிதத்தை வழங்கியுள்ளார்.

announce next karnataka cm

தொடர்ந்து மாலையில் கார்கேவை சந்தித்து பேசிய சித்தாராமையா, அவருக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏக்களின் பட்டியலை வழங்கியுள்ளார்.

announce next karnataka cm


இந்நிலையில் முதல்வர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில், கர்நாடக முதல்வர் யார் என்பதை இன்று மாலை மல்லிகார்ஜுன கார்கே அறிவிக்க உள்ளார்.

இன்று மாலை பெங்களூருவில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது முதல்வர் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட உள்ளார்.

மோனிஷா

என் அனுமதியில்லாமல் யாரையும் வேலைக்குச் சேர்க்கக்கூடாது: எலான் மஸ்க்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *