கர்நாடகா வசம் உள்ள மராத்தி மொழி பேசும் பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்கவேண்டும் என்று உத்தவ் தாக்கரே கோரிக்கை வைத்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சியும், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் எல்லை பகுதிகளான பெலகாவி, பீதர், கார்வார் உள்ளிட்ட மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை மகாராஷ்டிரா மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என நீண்ட கால போராட்டம் சமீப நாட்களாக வலுத்து வருகிறது.

இந்நிலையில் மாகராஷ்டிர மாநில சட்டமன்றத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, கர்நாடகா மாநில வசம் உள்ள பகுதிகளை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
குறிப்பாக சட்டமன்றத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, இது மாநில மொழி, எல்லை, தொடர்பான விஷயம் மட்டும் அல்ல. இது ஒரு மனிதநேயம் தொடர்பான விஷயம் என்றார்.
கர்நாடகா மாநிகத்தில் உள்ள எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பூர்வீகம் பூர்வீகமாக மராத்தி மொழி பேசி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதுவரை குறிப்பிட்ட மராத்தி மொழி அதிகம் பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்.
மாநிலங்களின், மக்களின், பாதுகாவலராக பிரதமர் மோடி உள்ளார் என கூறப்படும் நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பாதுகாவலராக உள்ளாரா! என்பதை பொறுத்து இருந்து பார்க்கிறோம் என கூறியுள்ளார்.
அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஏன் இப்போது வரை மாநில உரிமைக்காக எந்த கேள்வியும் எழுப்பவில்லை என கேள்வி எழுப்பினார்.
கலை.ரா
அறிவிப்பு பலகை விழுந்து உயிரிழப்பது கடவுள் செயலா? – நெடுஞ்சாலைத்துறைக்கு நீதிமன்றம் கேள்வி!