லோ சிபில் ஸ்கோர்: மணமகனுக்கு நடந்த சம்பவம்!

Published On:

| By Kumaresan M

மணமகனின் லோ சிபில் ஸ்கோரால் திருமணம் நின்று போன சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. maharashtra wedding called off

பல்வேறு காரணங்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நின்று போவது உண்டு. குடித்து விட்டு மணமேடைக்கு வரும் மணமகன்கள், மணமகனின் தகாத உறவு கடைசி நேரத்தில் தெரிய வருவது, காதல் விவகாரம் காரணமாக தாலி கட்டும் நேரத்தில் திருமணம் நின்று போவது உண்டு. ஆனால், இப்போது சிபில் ஸ்கோர் குறைவாக இருந்ததால், திருமணம் நின்று போன சம்பவம் மகராஷ்டிர மாநிலம் முர்தீஷாபூரில் நடந்துள்ளது.

இந்த நகரத்தில் இருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணம் நடக்க போகும் சமயத்தில் மணப்பெண்ணின் தாய் மாமன், மணமகனின் சிபில் ஸ்கோரை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளார். சிபில் ஸ்கோர் குறைவாக காட்டியுள்ளது.

பல வங்கிகளில் மணமகன் லோன் எடுத்து சரியான முறையில் திரும்ப செலுத்தாததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மணமகனால் சரியாக நிதியை கையாள தெரியவில்லை என்று மணமகள் வீட்டார் குற்றம் சாட்டியதோடு, திருமணத்தையும் நிறுத்தி விட்டனர். இதனால், மணமகன் நொந்து போனார்.

நாட்டிலேயே சிபில் ஸ்கோர் காரணமாக நின்று போன முதல் திருமணம் இதுதான். எனவே, இளைஞர்களே இனி சிபில் ஸ்கோரை நல்ல முறையில் வைத்துக் கொள்ளுங்கள்.

இது தொடர்பாக நிதி ஆலோசகர் ஸ்ரீதரிடத்தில் பேசிய போது, “இது புதிய தகவலாக உள்ளது. எனினும், நிச்சயமாக மணமகனின் சிபில் ஸ்கோரை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். அப்போதுதான், உண்மையான நிதி நிலையை நாம் அறிந்து கொள்ள முடியும்” என்கிறார். maharashtra wedding called off

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share