ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் தேசிய கீதம் பாடி புது முயற்சி!

இந்தியா

மகாராஷ்டிராவில், 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் தேசிய கீதம் பாடப்பட்டது.

76 ஆவது சுதந்திர தின விழா இரு தினங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதற்காக நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் தற்போது வரை கொண்டாட்டம் முடிவடையவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஒரு புது உத்தரவை மக்களுக்கு பிறப்பித்தது..

அதன்படி மாநிலத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் காலை 11 மணிக்கு தேசிய கீதம் பாட வேண்டும் என்று உத்தரவிட்டது.

மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் தேசிய கீதம் பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவித்திருந்தது.

இதன் அடிப்படையில் இன்று 11 மணியளவில் மாநிலம் முழுவதும் தேசிய கீதம் பாடப்பட்டது.

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தெலுங்கானாவில் 11 ஆயிரம் இடத்தில் 28 லட்சம் பேர் காலை 11.30 மணியளவில் தேசிய கீதம் பாடியுள்ளனர்.

மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், சிறைகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தேசிய கீதம் பாடப்பட்டது.

ஹைதராபாத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் 58 விநாடிகளுக்கு மெட்ரோ ரயில் நிறுத்தப்பட்டு மெட்ரோ ரயில் ஊழியர்கள் மற்றும் பயணிகள் ஒன்றாக சேர்ந்து தேசிய கீதத்தை பாடினர்.

தேசிய கீதத்தை முழுமையாக பாடி முடிப்பதற்கு சரியாக 52 விநாடிகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மோனிஷா

இந்திய சுதந்திரத்துக்கு 75 வயது நிறைந்தது! வளர்ந்து செழிக்கட்டும் இந்தியக் கூட்டாட்சி குடியரசு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.